கல்முனை மஹ்மூத் கல்லூரியில் கலை,வர்த்தகப் பிரிவு மாணவிகளின் பெற்றோருடனான கலந்துரையாடல்


அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி (தேசிய பாடசாலை)யிலிருந்து 2024ஆம் ஆண்டு க.பொ.த (உ/த) பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவிகளுக்கு கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் நடத்தப்படவுள்ள மாகாண மட்டத்திலான பைலட் மதிப்பீட்டு (Pilot Assessment) பரீட்சை தொடர்பாக மாணவிகளின் பெற்றோர்களுடனான கலந்துரையாடல் கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தலைமையில் இடம்பெற்றது.

மாகாண மட்டத்திலான பைலட் மதிப்பீட்டு பரீட்சையில் பெற்ற பெறுபேறுகளை மாவட்ட அடிப்படையில் இசட் மதிப்பெண் (Z-score) மற்றும் தரவாிசை (Rank) வழங்கி பகுப்பாய்வு செய்தல்,

உயர்தர பிரிவின் கற்றல், கற்பித்தல், பாடப்பரப்பு நிறைவு தொடர்பான பகுப்பாய்வு,

உயர்தர பரீட்சை எழுதவுள்ள காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்த்திட்டங்கள்,

உயர்தர பரீட்சையில் மாணவிகளின் பல்கலைக்கழக நுழைவினை அதிகரித்தல்,

பெற்றோர்கள் பாடசாலையுடன் தொடர்புற வேண்டியதன் அவசியம். என்பன தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.


இக்கலந்துரையாடலில் கலை வர்த்தகப் பிரிவு மாணவிகளின் பெற்றோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் கலை, வர்த்தகப் பிரிவு தலைவி ஜ.எல்.எம்.எச். ஷம்சுல் ஹிதாயா அவர்களும் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :