இலங்கையின் பாரிய திட்டங்களில் ஈரான் துணை நிற்கும்..! ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உறுதி



ரான் தனது அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஈரான் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் முன்னேற்றத்துக்காக பாரிய திட்டங்களில் இலங்கையுடன் ஈரான் துணை நிற்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன் டொலர்கள் பெறுமதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் குறித்த திட்டத்தைத் திறந்து வைப்பதற்காகவே ஈரான் ஜனாதிபதி இன்று மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :