ஜனாதிபதியின் காஸா சிறுவர் நிதி­யத்­திற்கு 5 மில்லியன் நிதியை ஜனாதிபதியிடம் கையளித்த கல்முனை பிராந்திய பொது நிறுவனங்கள்.நூருல் ஹுதா உமர்-
னா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் யோச­னையின் பேரில் காஸா பகு­தியில் இடம்­பெற்ற மோதல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்கும் நோக்கில் ஆரம்­பிக்­கப்­பட்ட காஸா சிறுவர் நிதி­யத்­திற்கு கல்முனை வலயக்கல்வி அலுவலகம், கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் மற்றும் ஸ்போர்ட்ஸ் பெர்ஸ்ட் பௌண்டஷன் ஆகிய பொதுநிறுவனங்களினால் 50 லட்சம் ரூபாய் நிதி நன்­கொ­டை­யாக இன்று (26) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமாடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிதி கையளிக்கும் நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான வஜீர அபேவர்த்தன உட்பட அதிகாரிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

காஸா சிறுவர்களின் நல திட்டத்திற்காக கல்முனை கல்வி வலய உத்தியோகத்தர்கள், அதிபர், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்களின் பங்களிப்பில் 3,128,500/- நிதியும், கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் சார்பில் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் தனவந்தர்களின் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற 1,589,000/- நிதியும், ஸ்போர்ட்ஸ் பெர்ஸ்ட் பௌண்டஷன் சார்பில் 300,000/- ரூபாய் நிதியுமாக ஐந்து மில்லியன் ரூபாய் பணத்தை இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.

ஸ்போர்ட்ஸ் பெர்ஸ்ட் பௌண்டஷன் சார்பில் நிதியை பௌண்டஷனின் தவிசாளர் திகாமாடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களும், கல்முனை கல்வி வலய நிதியை பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் தலைமையிலான பிரதிக் கல்வி பணிப்பாளர் எம்.எச். ஜாபீர், கணக்காளர் வை. ஹபீபுல்லா, அதிபர், ஆசிரியர் சார்பில் நவாஸ் சௌபி அடங்கிய குழுவும், கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் சார்பில் பள்ளிவாசல் தலைவர் ஏ.எம். இப்ராஹிம் மற்றும் நிர்வாகிகளும் கையளித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :