சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய மாணவர்களுடன் அவர்களின் கல்வித் தேவைகள் குறித்து சாய்ந்தமருது இளங்கலை பட்டதாரிகள் அமைப்பு சிநேகபூர்வ கலந்துரையாடல்அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் 2024/25 ஆம் கல்வியாண்டுக்கான (க.பொ.த) சாதாரண தர புதிய வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிராந்தியத்தில் மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஒரு பொறுப்பான அமைப்பாக, இளங்கலை பட்டதாரிகள் அமைப்பு (UGAS )இலவச மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்ய உத்தேசித்துள்ளது.

மாணவர்களுக்கு உண்மையில் என்ன வகையான கல்வித் தேவைகள் உள்ளன என்பதை கண்டறிய, மாணவர்களுடன் நேரடியான நட்புரீதியான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டு அமைப்பின் தற்போதய தலைவர் ஏ.ஜி.எம்.. இக்லாஸ் களத்திற்கு நேரடியாக சென்று மாணவர்களுடன் உரையாடினார்.

மாணவர்களுக்கு கல்வி உதவிகள் மிகவும் தேவைப்படுவதாகவும் மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே, தன்னாவலர்களின் பங்களிப்புடன் அவர்களுக்கு தன்னால் இயன்ற அளவு கல்வி ரீதியாக உதவ முடியும் என்று UGAS நம்புகிறது.

அதனடிப்படையில் அனைத்து பாடங்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களை சுழற்சி முறையில் நியமித்து தொடர்ச்சியான வகுப்புக்களை பாடசாலை சமூகத்தின் பூரண ஒத்துழைப்புடன் நடாத்த UGAS திட்டமிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :