மடத்தடியில் களைகட்டிய மீனாட்சியம்மன் ஆலய மகா சங்காபிஷேகம்.வி.ரி.சகாதேவராஜா-
ரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகா சங்காபிஷேக நிகழ்வு நேற்று ( 16) சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

108 சங்காபிஷேக நிகழ்வு ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் ஆலயகுரு சிவசிறி ஹோவர்த்தன சர்மா தலைமையிலான சிவாச்சாரியார்கள் முன்னிலையில் காலை 9.00 மணி முதல் சங்காபிஷேக கிரியைகள் நடைபெற்றன.

முன்னதாக ஆலய பரிபாலன சபையின் தலைவர் கலாநிதி கி.ஜெயசிறில் முன்னிலையில் சிவலிங்க அபிஷேகம் இடம்பெற்றது.

இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் , அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், ஜனாதிபதி செயலணியின் கிழக்கு மாகாண இணைப்பாளர் கணபதிப்பிள்ளை மோகன் , வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி எம். கோபாலரெத்தினம், ஆலய பரிபாலன சபை ஆலோசகர் உதவிக் கல்விப் பணிப்பாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

சுமார் ஆயிரம் அடியார்கள் கலந்து கொண்டார்கள். மரகதம் நூல் வெளியீடும் அன்னதானமும் இடம்பெற்றன-இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :