காரைதீவில் இ.கி.மிஷன் குடும்ப சுகாதார நிலையம் திறந்துவைப்பு!



வி.ரி.சகாதேவராஜா-
லங்கை இராமகிருஷ்ண மிஷன் காரைதீவு சாரதா நலன்புரி நிலையத்தில் நேற்று முன்தினம்  ( 29) வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு குடும்ப சுகாதார நிலையம்(dispensary) திறந்து வைக்கப்பட்டது.

முன்னதாக காரைதீவு கொம்புச்சந்தியில் வைத்து சுவாமிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அக்கரைப்பற்று சுவாமி விபுலாநந்தர் சிறுவர் இல்ல முகாமையாளர் த.கயிலாயபிள்ளை காரைதீவு விபுலானந்தா ஞாபகார்த்த பணி மன்ற ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் சுவாமிகளுக்கு மாலை சூட்டி பாதநமஸ்காரம் செய்து வரவேற்றார்கள்.

இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாக இலங்கை ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மாநந்தா ஜீ மகராஜ் கலந்துகொண்டு பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து நாடாவெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் விசேட வழிபாடுகள் இடம் பெற்றன.
உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரார்ச்சிதானந்த ஜீ மகராஜ் கலந்து சிறப்பித்தார்.
முதலில் சுவாமிகளுக்கு அழுத்தம்( பிறசர்) பார்க்கப்பட்டது. கல்முனை ஆதாரவைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் இரா. முரளீஸ்வரன் முன்னிலையில் டாக்டர்களான பா.சுரேஸ்குமார், திருமதி ஜீவராணி சிவசுப்பிரமணியம்,திருமதி மஞ்சுரேகா ஆகியோர் அழுத்தம் பார்த்தனர்.

பின்னர் சாரதா நலன்புரி நிலையத்தில் விசேட கூட்டம் இடம்பெற்றது.
சுவாமிகளின் அருளுரைகள் இடம்பெற்றன. பெருந்திரளான பக்தர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
வாரத்தில் திங்கள் புதன் வெள்ளி ஆகிய தினங்களில் மாலை ஐந்து மணியிலிருந்து ஆறு மணி வரையான காலப்பகுதியில் இங்கு இலவசமாக சுகாதார சேவை இடம் பெற இருக்கிறது .
காரைதீவு வைத்தியர்கள் மற்றும் சுகாதார சேவையாளர்கள் தொண்டரடிப்படையில் பணியாற்ற முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :