க.பொ.த (சா/த) மாணவர்களுக்கான விசேட தர்பியா அமர்வும் இப்தார் நிகழ்வும்




அஸ்ஹர் இப்றாஹிம்-
காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் இவ்வருடம் க.பொ.த. (சா/த) பரீட்சை எழுத உள்ள 39 மாணவர்களுக்கான விசேட தர்பியா நிகழ்வும் இப்தார் ஏற்பாடும்  (17) ஞாயிற்றுக்கிழமை பாடசாலையின் விஞ்ஞான ஆய்வு கூடத்திலும் பிரதான மண்டபத்திலும் நடைபெற்றது.

இவ்வருடம் பரீட்சைக்கு தோற்ற இருக்கின்ற மாணவர்களுடைய றமழான் கால கற்றல் செயற்பாடுகள் தொடர்பாகவும் தங்களுடைய கற்றல் செயற்பாடுகளை தொடர்ச்சியாக வரும் காலத்தில் எவ்வாறு ஒழுங்குபடுத்திக் கொள்வது என்பது தொடர்பாகவும் மாணவர்களுக்கு வழிகாட்டுகின்ற நிகழ்வு பாடசாலையினுடைய நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் காத்தான்குடி பிஸ்மி கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க். எம், பீ.எம்.பிர்தெளஸ் (நளீமி) மற்றும் கொழும்பு அமல் சர்வதேச பாடசாலையினுடைய பிரதி அதிபர் அஷ்ஷெய்க். எம்.சப்ரி (நளீமி) ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அதிபர், ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :