நல்லிணக்க இப்தாரில் சாதனையாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகத்தான கௌரவம். கலாநிதி வி. ஜனகன் வழங்கினார்வூதி அரேபியாவுக்கான தூதுவராக நியமனம் பெற்றுள்ள சிரேஷ்ட இராஜதந்திரி ஓ. எல். அமீர் அஜ்வாத், வசந்தம் தொலைக்காட்சியின் பிரதான முகாமையாளராக நியமனம் பெற்றுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.இர்பான் ஆகியோருக்கு மட்டக்குளியில் கடந்த வியாழக்கிழமை நடத்திய இப்தார் நிகழ்வில் வைத்து ஐ டி எம் ன் சி சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளரும், ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.விநாயகமூர்த்தி ஜனகன் மகத்தான கௌரவிப்பு வழங்கினார்.

கலாநிதி ஜனகனின் எண்ண கருவில், இவருடைய ஜனனம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில், ஐ டி எம். என் சி சர்வதேச கல்வி நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவோம் என்கிற மகுடத்திலான இப்தார் நிகழ்வு மட்டக்குளி ஹம்சா கல்லூரி மண்டபத்தில் பல நூற்று கணக்கானவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

பொதுவாக இனங்களுக்கிடையிலான குறிப்பாக தமிழ் பேசும் சமூகங்களுக்கிடையிலான உறவு பாலமாக அமைந்த இந்நிகழ்வில் அஜ்வாத், இர்பான் ஆகியோர் கலாநிதி ஜனகனால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாக அமைந்தது.

அத்துடன் அரசியல், சமூக, பொதுநல, கல்வி, ஊடக செயற்பாடுகளை மிக சிறப்பான முறையில் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமைக்காக அவருடைய அபிமானிகளால் கலாநிதி ஜனகன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :