மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை தாக்கி இருவர் மரணம்



ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்-
ட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் யானையின் தாக்குதல்களால் விவசாயிகள், பண்ணையாளர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவு, ஈரளக்குளத்தில் நேற்றிரவும் (16/03), கிரான் பிரதேச செயலகப்பிரிவு திகிலிவெட்டையில் இன்று அதிகாலையிலுமே (17/03) மேற்படி சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

இரு வெவ்வேறு பிரதேச செயலகப்பிரிவுகளிலும் இடம்பெற்ற மரணத்திற்கான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரிகளான MSM.நஸீர், K.பவளகேசன் ஆகியோர் கரடியனாறு மற்றும் சந்திவெளி பொலிஸாருடன் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று மேற்கொண்டனர்.

ஆவெட்டியாவெளியில் மாடு வளர்ப்பில் ஈடுபட்ட, சித்தாண்டியைச்சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான பத்மநாதன் மோகனதாஸ் (45) என்பவர் நேற்று மாலை உறவினர் ஒருவரின் வீட்டுக்குச்சென்று, பண்ணையை நோக்கி இரவு 09 மணியளவில் நடந்து செல்லும் போது ஈரளக்குளத்தில் வீதியோரமாக நின்ற யானையொன்றினால் தாக்குண்டு சம்பவ இடத்திலேயே மரணித்ததோடு, திகிலிவெட்டை, குளத்துவெட்டையை சேர்ந்த நாகராசா முரளிதரன் (31)என்ற ஒரு பிள்ளையின் தந்தையான இவர் நண்பர் ஒருவருடன் நள்ளிரவு வேளை வலைவீசி மீன் பிடிக்கச்சென்று அதிகாலை வேளை குளத்தின் ஓரமாக நின்ற மதுரை மரத்தின் கீழ் படுத்துறங்கிய போது யானையின் தாக்குதலுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளார்.

இரு சடலங்களும் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவிருக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :