ஒரு பாடத்துக்கு நான்கு டியூஷன் தேவையில்லை! சுயகற்றலே அவசியம் என்கிறார் பேராசிரியர் மதிவேந்தன்.காரைதீவு சகா-
ரு பாடத்திற்கு நான்கு இடங்களில் டியூஷன் செல்வதால் எந்த பிரயோசனமும் இல்லை. சுயகற்றல்(self learning) ஒன்றே முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் .

இவ்வாறு காரைதீவில் இடம் பெற்ற கல்விச் சாதனையாளர் பாராட்டு விழாவில் உரையாற்றிய கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பபீட பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி தவநாயகம் மதிவேந்தன் தெரிவித்தார்.

காரைதீவு ரக்ஸ் மற்றும் அஸ்கோ அமைப்பின் வருடாந்த கல்விச்சாதனையாளர் கௌரவிப்பு விழா நேற்று (3) சனிக்கிழமை காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
அமைப்பின் செயலாளர் ச.நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பபீட பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி தவநாயகம் மதிவேந்தன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

காரைதீவு அஸ்கோ மற்றும் ரக்ஸ் அமைப்பின் ஸ்தாபகர் கனடாவில் வதியும் வைத்திய கலாநிதி டாக்டர் அருளானந்தம் வரதராஜா வின் ஏற்பாட்டில் ஏனைய புலம்பெயர் அனுசரணையாளர்களின் பங்களிப்புடன் இப்பாராட்டு பல வருடங்களாக நடைபெற்று வருகிறது.

விழாவில் நட்சத்திர அதிதிகளாக கிழக்கு மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர் எஸ். புவனேந்திரன், காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன், பொதுச் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் நடேசன் அகிலன், பிரதம பொறியியலாளர் ப.இராஜமோகன், உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகா தேவராஜா, பொறியியலாளர் என்.பிரேமகாந்தன் , வைத்திய அதிகாரி டாக்டர் எல்.லேணுசா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
விஞ்சைமிகு அதிதிகளாக காரைதீவு இலங்கை வங்கி முகாமையாளர் திருமதி யாழினி மோகனகாந், அதிபர் எஸ்.மணிமாறன் ஆகியோரும், வித்திய அதிதிகளாக ஆசிரியர்களான ரி.தெய்வீகன், எஸ்.தேவகுமார்,கே.ருத்ரகுமார்,ஈ.சங்கீத், திருமதி ஜே.சந்திரசேகரம் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

உயர்தரம் கற்கும் காலத்தில் நாள் ஒன்றுக்கு நான்கு மணித்தியாலங்கள் கட்டாயம் சுயகற்றலில் ஈடுபடவேண்டும்.

சுயகற்றல் ஒன்றே வெற்றியைத் தரும். குறிப்பாக ஆசிரியர் கைநூலை படியுங்கள். அதிலுள்ள விடைகளைத்தவிர வேறொன்றுமில்லை.

காரைதீவில் இம் முறை 37 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கின்றார்கள். இங்கு பாராட்டு விழா சிறப்பாக நடைபெறுகிது .
அடுத்த முறை இந்த எண்ணிக்கைஐம்பதாக வேண்டும்.
முடியுமானவரை மொபைல் தொலைபேசிப் பாவனையை குறையுங்கள். அப்பொழுது முன்னேறலாம் என்றார்.

இங்கு மூன்று ஏ பெற்ற ஐந்து மாணவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் பரிசும் அடுத்த கட்ட பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கு தலா 50ஆயிரம் ரூபாவும் ஏனையோருக்கு பதக்கமும் வழங்கி கௌரவிப்பு இடம் பெற்றது.
புலம்பெயர் அனுசரணையாளர்களான டாக்டர் அ.வரதராசா( கனடா), மு.யோகராசா( கனடா), டாக்டர் த.கௌரிகாந்தன்( அவுஸ்திரேலியா), சி.கருணாநிதி( லண்டன்), பொறியியலாளர் வீ.சத்தியமூர்த்தி( அவுஸ்திரேலியா), பொறியியலாளர் எஸ்.பிரேமகாந்தன்( லண்டன்), ச.ஹரிகரராஜா( லண்டன்) ஆகியோர் விழாவில் பாராட்டப்பட்டனர்.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் தவநாயகம் மதிவேந்தன் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டு பிறந்த மண்ணில் பாராட்டப்பட்டார்.
விழாவை கல்வியியலாளர் வி.ரி.சகாதேவராஜா நெறிப்படுத்தி தொகுத்தளித்தார்.

அஸ்கோ அமைப்பின் அதிபர் எம்.சுந்தரராஜனின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற நிகழ்வில், பொருளாளர் பி.கேதீஸ் ஆசிரியர் நன்றியுரையாற்றினார். சாதனை மாணவர்களின் பெற்றோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :