ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி புனரமைப்புக்காக தொடர் கோரிக்கைகளை முன் வைத்த போதிலும் தற்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதுஅஸ்ஹர் இப்றாஹிம்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி புனரமைப்புக்காக உயர்பீட கூட்டங்களில் தொடர் கோரிக்கைகளை முன்வைத்தவர் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம்; தவிசாளர் அப்துல் மஜீத் சாட்சியம்.

சாய்ந்தமருது 21ம் வட்டாரத்தில் அமைந்துள்ள 05,07,09 கிராம சேவகர் பிரிவுகளுக்கான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளைகள் புனரமைப்புக் கூட்டம் அண்மையில் சாய்ந்தமருது 21ம் வட்டார வேட்பாளர் பாமி மன்சூர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பைசால் காசிம் அவர்கள் தனதுரையில் "கட்சி புனரமைப்புக்காக உயர்பீட கூட்டங்களில் தொடர் கோரிக்கைகளை தான் முன்வைத்து வந்த போதிலும், தற்போதுதான் அதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், இதன் மூலம் கட்சிக் கட்டமைப்பினை உறுதி செய்து எதிர்கால அரசியல் களத்தில் உயர் அடைவுகளை சாத்தியமாக்க போராளிகளும், கட்சியின் முக்கியஸ்தர்களும் ஒத்துழைக்க வேண்டும். மேலும் அடுத்தகட்ட நகர்வுகள் யாவும் மத்திய குழுக்கள் ஊடாகவே மேற்கொள்ளப்படும்" போன்ற பல முக்கிய விடயங்களை குறிப்பிட்டிருந்தார்.
அடுத்து உரையாற்றிய ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், இணைந்த வட-கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான (முழக்கம்) ஏ.எல். அப்துல் மஜீத் அவர்கள் "கட்சி புனரமைப்புக்காக உயர்பீட கூட்டங்களில் தொடர் கோரிக்கைகளை முன்வைத்தவர் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் என சபையோர் முன்னிலையில் சாட்சியம் வழங்கிய செயலானது தற்போது இடம்பெறுகின்ற கட்சி புனரமைப்புப் பணிகளுக்கு முக்கிய காரணியாக பாராளுமன்ற உறுப்பினரை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைந்தது.

இந்நிகழ்வில் கட்சியின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன், முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வரும், சாய்ந்தமருது அமைப்பாளருமான பிர்தௌஸ், முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் எம்.எம். பசீர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும், கட்சிப் போராளிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :