கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் ரத்து : ஜனாதிபதி செயலாளருக்கும், ஆளுநருக்கும் ஹரீஸ் எம்.பி நன்றி தெரிவிப்பு !நூருல் ஹுதா உமர்-
கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டமான் அவர்கள் சற்று நேரத்திற்கு முன்னர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அம்பாறை மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தொடரில் நான் நேற்று அவரிடமும் ஜனாதிபதி செயலாளரிடமும் பேசிய விடயத்தை உரிய அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தி அந்த இடமாற்றத்தை ரத்துசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக எனக்கு அறியத்தந்தார். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிராத்தித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இதன்போது அம்பாறை மாவட்ட கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, திருக்கோவில் போன்ற கல்வி வலயங்களிலிருந்து வினைத்திறன் மிக்க 400 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் முறையான பதிலீடுகளின்றி ஏனைய மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவதனால் அம்பாறை மாவட்ட கல்வி பின்னோக்கி செல்லும் அபாயம் உள்ளத்துடன் மாணவர்களின் கல்விநிலை சீரழியும் ஆபத்தும் உள்ளதை ஜனாதிபதி செயலாளருக்கும் ஆளுநருக்கும் நான் நேற்று விளக்கிய விடயத்தை ஆளுநர் ஆராய்ந்ததாகவும் இவ்வாறான தவறுகல் இனி நடக்காது பார்த்துக்கொள்ள மாகாண கல்விப்பணிப்பாளரை தான் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் என்னிடம் தெரிவித்தார். என்றும் இந்த இடமாற்ற விடயத்தில் கரிசனை செலுத்திய இடமாற்றத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :