நிறுவுனர்கள் தினத்தை சிறப்பாகக் கொண்டாடிய ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம்எம்.எஸ்.எம்.ஸாகிர்-
1973 ஆம் ஆண்டு பேருவளை சீனங்கோட்டையில் நளீம் ஹாஜியாரினால் ஸ்தாபிக்கப்பட்ட ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் அதன் ஐம்பது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்த நாற்பெரும் விழாக்கள் (11) ஞாயிறு சிறப்பாக நடந்தேறின.

ஜாமிஆ நளீமிய்யா நிர்வாகமும் கலாபீடத்தின் பேருவளை வலய பழைய மாணவர்கள் அமைப்பும் இணைந்து இவ்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

நிறுவுனர் தின நிகழ்வில் ஸ்தாபக உறுப்பினர்கள் கௌரவிக்கப்படல், கலாபீடத்தின் ஐம்பதாண்டு கல்விப்பணி நினைவு தபால் முத்திரை வெளியீடு, "ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம்: எண்ணக்கருவும் தோற்றமும்" நூல் வெளியீடு, சூரிய மின்கல அங்குரார்ப்பணம் என நான்கு பிரதான நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஜாமிஆ நளீமிய்யா கலாபீட ஸ்தாபக உறுப்பினர்களான அல்ஹாஜ் M. I. நளீம், அல்ஹாஜ் CLM.அபுல் ஹஸன், அல்ஹாஜ் MHM.ஹிபதுல்லாஹ், அல்ஹாஜ் AHM. முக்தார், அல்ஹாஜ் ARM.ஸுலைமான், அல்ஹாஜ் M.ராசிக் யூசுஃப், அல்ஹாஜ் ATM.பாயிஸ், அல்ஹாஜ் AMM.ரவூஃப், அல்ஹாஜ் MIM.மன்ஸுர் ஆலிம், அல்ஹாஜ் Dr.U.L.M.பஷீர், அல்ஹாஜ் MHM.ஹம்சா, அல்ஹாஜ் CM.அப்துல் கபூர், அல்ஹாஜ் Y.L.M.அமீர், அல்ஹாஜ் A.A.M. முஹம்மத் காஸிம், அல்ஹாஜ் ACM.ஸல்மான், அல்ஹாஜ் ARM.பாஃரூக், அல்ஹாஜ் MRM.ஹம்சா, அல்ஹாஜ் SM.ஹாஷிம், அல்ஹாஜ் ABM.ஹனீபா, அல்ஹாஜ் SM. அன்வர், அல்ஹாஜ் SMM பாஸி, அல்ஹாஜ் MHM.நவ்மான், அல்ஹாஜ் MIM.கலீல்,அல்ஹாஜ் MSM.யாகூத், அல்ஹாஜ் AAM.ஹாரூன், அல்ஹாஜ் AAM.ஹனபி, அல்ஹாஜ் SM.ஸனூன், அல்ஹாஜ் ACA.வதூத், அல்ஹாஜ் MSM.மர்ஸூக், அல்ஹாஜ் YLM.ஸாலிஹ், அல்ஹாஜ் AIM.அன்வர், அல்ஹாஜ் MSM.அனஸ், அல்ஹாஜ் AAM.மஸூத் ஆலிம், அல்ஹாஜ் AMA.அஸீஸ், கலாநிதி MAM.ஷுக்ரி, நீதிபதி AM.அமீன், அல்ஹாஜ் MH.மெளலவி ஷாஹுல் ஹமீத் பஹ்ஜி ஆகிய 37 ஸ்தாபக உறுப்பினர்களது அயராத சேவையினைப் பாராட்டி, இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிறுவுனர் தின நிகழ்வில் பரிபாலன சபையின் சிரேஷ்ட உறுப்பினர்களான அல்ஹாஜ் நௌபல் S. ஜாபிர், அல்ஹாஜ் AA. முஹம்மட் சஹீட், அல்ஹாஜ் ACMA.மஷுட், அல்ஹாஜ் MCM. ஹம்ஸா அல்ஹாஜ் AJM. மஷுட், அல்ஹாஜ் JMM. ராஜி, NM. ஜுனைட், அல்ஹாஜ் MSM. றஸ்வி, அல்ஹாஜ் AWM. நௌபர், அல்ஹாஜ் MZ. ஸவாஹிர் ஆகிய 10 உறுப்பினர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

நிறுவுனர்களில் பலர் இன்று இல்லாத நிலையில் அவர்களும் இதன்போது நினைவு கூரப்பட்டதும் அவர்களது சார்பில் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் நினைவுச்சின்னங்களை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் மர்ஜான் பழீல் கலந்து சிறப்பித்தார். பரிபாலன சபைத் தலைவர் அல்ஹாஜ் யாகூத் நளீம்
நிகழ்வில் விசேட அதிதியாகவும், கலாபீட முதல்வர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர். ஜாமிஆ நளீமிய்யாவின் ஆளுனர் சபை உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மாகார் விழாவில் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

வெகு விமரிசையாக நடைபெற்ற இவ்விழாவில் பிரமுகர்கள், உலமாக்கள், நளீமிய்யா விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள், ஊர்மக்கள், நலன் விரும்பிகள், கலாபீட மாணவர்கள் என பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :