சேவைகளைப் பெற வரும் மக்களை அலைக்கழிக்காமல் அவர்களுக்குத் தேவையான சேவைகளை உடனடியாக வழங்குமாறு அமைச்சர் பிரசன்ன அறிவுறுத்தல்.முனீரா அபூபக்கர்-

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட அலுவலகங்களின் தாமதம் தொடர்பான முறைப்பாடுகள்...


சுற்றறிக்கை ஆவணங்களை தளர்த்தி மக்களுக்கு சேவை செய்யுங்கள்...


சேவைகளைப் பெற வரும் மக்களை அலைக்கழிக்காமல் அவர்களுக்குத் தேவையான சேவைகளை உடனடியாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் அறிவுறுத்தல்...சேவைகளைப் பெற வரும் மக்களை அலைக்கழிக்காமல் அவர்களுக்குத் தேவையான சேவைகளை உடனடியாக வழங்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அந்த அதிகார சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட அலுவலகங்களில் காலதாமதம் ஏற்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

இவ்விடயம் தொடர்பில் தாம் தீவிர அவதானம் செலுத்தியுள்ளதாகவும் மக்களை இவ்வாறு அலைய வைக்கும் அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அண்மையில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாத்தறை மாவட்ட காரியாலயத்திற்கு சென்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாத்தறை மாவட்ட காரியாலயத்திற்கு சென்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மாத்தறை மாவட்ட அலுவலகத்தின் பணிகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர், அங்கிருந்த அதிகாரிகளுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் கூறியதாவது:

“இந்த அமைச்சு நாட்டின் மிக முக்கியமான அமைச்சுகளில் ஒன்றாகும். நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது இந்த அமைச்சை நான் பொறுப்பேற்றேன். ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் வேலைப் பாதுகாப்பு அந்த நிறுவனத்தின் இருப்பைப் பொறுத்தது. நிறுவனங்களுக்கு நாம் நியமிக்கும் தலைவர்களின் பொறுப்பு, நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதுதான்.

நாங்கள் இந்த அமைச்சை பொறுப்பேற்ற போது அதன் கீழ் உள்ள நிறுவனங்களில் சுமார் 8 நிறுவனங்கள் மூடப்பட்டன. கடந்த காலங்களில் சில மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அப்படி நிகழும்போது அந்த அமைப்புக்கு சுமைதான். மக்களின் பணத்தில் சம்பளம் கொடுக்கிறோம்.

நிறுவன ஊழியர்களுக்கு சுதந்திரமாக வேலை செய்வதற்கான வாய்ப்பை நாங்கள் வழங்க வேண்டும். அத்துடன், தற்போதுள்ள சுற்றறிக்கைகளை தளர்த்தி மக்களுக்கு சேவை செய்வதற்கான இடத்தை வழங்க வேண்டும். சுற்றறிக்கைகள் முன்வைக்கப்பட்டு வேலைகள் நடைபெறவில்லையென்றால் அதை கடைப்பிடிப்போம். மேலும் உழைக்கும் ஒருவரால் தவறு இருந்தாலும் மன்னிக்க வேண்டும். ஊழியர்களின் நலனுக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்.

இந்த நிறுவனத்திற்கு நல்ல அனுபவமுள்ள தலைவர் கிடைத்துள்ளார். கடந்த காலங்களில் இந்த நிறுவனம் சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலையில் இருந்தது. ஆனால் இன்று அந்த நிறுவனம் ஒரு நிலையான நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளாக அபிவிருத்திப் பணிகளைச் சரியாகச் செய்ய முடியவில்லை. எனவே இவ்வருடம் மக்களுக்கான பல அபிவிருத்திப் பணிகளைச் செய்ய தயாராகி வருகின்றோம்.

எப்பொழுதும் நாங்கள் காலக்கெடுவோடு தான் வேலை செய்ய வேண்டும். சரியான இலக்கை நோக்கி எங்களுக்குச் செல்ல முடியும் இரண்டு தடவை வரவைப்பது நல்லதல்ல. முடியுமாக இருந்தால் அதைச் செய்து கொடுக்க வேண்டும். முடியாத ஒன்று என்றால் நேரடியாக அதைச் சொல்ல வேண்டும். மக்களை பொய்யாக அலைக்கழிப்பது நல்லதல்ல. நாங்கள் சரியாக வேலை செய்தால்தான் அரச சேவையைப் பற்றி மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். அப்படிச் செய்ய முடியுமாக இருந்தால் தான் அது பெறுமதியான ஒன்றாய் இருக்கும்" என்றும் தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையானது இந்நாட்டு மக்களின் வீட்டுத் தேவைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிரதான நிறுவனமாகும். இந்த நிறுவனம் தற்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் செயல்படுகிறது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது மக்களின் வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. உங்களுக்கு வீடு நாட்டுக்கு நாளை வீட்டுத்திட்டம், மிஹிந்து நிவஹன திட்டம், விருசுமித்துரு திட்டம், இந்திய உதவி வீட்டுத்திட்டம் போன்றவை அவற்றில் சிலவாகும்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கொழும்பில் உள்ள பிரதான அலுவலகத்திற்கு மேலதிகமாக, 25 மாவட்ட அலுவலகங்கள் மற்றும் 2 நகர அலுவலகங்கள் உள்ளன. தற்போது இந்த நிறுவனத்தில் சுமார் 1,800 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

இந் நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்தியானந்தா, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி, அதன் மாத்தறை மாவட்ட முகாமையாளர் ஸ்ரீயானி மல்லிகா மற்றும் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :