தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் திருகோணமலை பொரலுகந்த ரஜமஹா விகாரையில் தைப்பொங்கல் நிகழ்வு (15) இடம் பெற்றுள்ளது.
திருகோணமலை நிலாவெளி வீதியிலுள்ள பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமஹா விகாரையின் விகாராதிபதி
சுகிதவங்ச திஸ்ஸ தேரர் இன ஒற்றுமையை வலுவூட்டும் விதத்தில் விகாரைக்கு அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று பொங்கல் நிகழ்விலும் கலந்து கொண்டுள்ளார்.
கடந்த காலங்களில் குறித்த விகாரையை நிர்மாணிக்கும் காலகட்டத்தில் பல எதிர்ப்புகள் இருந்த போதிலும் குறித்த இடத்திலேயே விகாரை நிர்மாணிக்கப்பட்டு தற்போது பிரித் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் குறித்த விகாரையின் விகாராதிபதி அனைவருடனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எல்லா மதங்களும் ஒன்றுமையையே போதிக்கின்றன. அதேபோன்று நாமும் ஐக்கியத்துடன் மற்றவர்களை மதித்து வாழ வேண்டும் என்ற நோக்குடன் பொங்கல் நிகழ்வுகளிலும் பங்கு கொண்டதாகவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment