அம்பாறை உகண மகாஓய வீதியை 3000 மில்லியன் செலவில் காபெட் வீதியாக செப்பனிடும் பணிகள் ஆரம்பம்!!துளை செங்கலடி மீள்நிர்மாண மற்றும் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் 25km நீளமான அம்பாறை உகன மகாஓய வீதியை காபெட் வீதியாக செப்பனிடும் பணிகள் சவூதி அரேபிய நாட்டின் நிதி உதவியுடன் சுமார் 3000 மில்லியன் செலவில் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத் துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேற்படி திட்டமானது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திரகாந்தனின் கோரிக்கைக்கு அமைவாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான டபிள்யூ.டீ.வீரசிங்க, கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன், மாவட்ட அமைப்பாளர் என்.திருநாவுக்கரசு உட்பட துறைசார் அதிகாரிகள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :