நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் பொலன்னறுவ, ஹிங்குராக்கொட, நெல் மாவத்தையிலுள்ள வீடொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் 23 வயதுடைய குடும்ப தலைவி உயிரிழப்பு.



அஸ்ஹர் இப்றாஹிம்-
பொலன்னறுவ ஹிங்குராக்கொட, நெல் மாவத்தையில் நேற்று முன்தினம் (11) வீட்டின் சுவருடன் கூரையும் இடிந்து விழுந்ததில் 23 வயதுடைய ஒரு தாயின் பிள்ளை உயிரிழந்துள்ளதுடன் அவரது கணவனும்,ஒரு வயது குழந்தையும் மிகவும் ஆபத்தான நிலையில் பொலனறுவ பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹிங்குராக்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ் அனர்த்தம் தொடர்பாக பொலன்னறுவ மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரி பாலித்த உபுல் குமார மாவட்ட அரசாங்க அதிபர் சுதந்த ஏகநாயகவின் கவனத்திற்கு கொண்டு வந்ததனை தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இரண்டரை இலட்சம் ரூபா நஸ்ட ஈட்டை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக ஹிங்குராக்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :