அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 2024 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகள் ஆரம்பித்து வைப்புசியாத் .எம்.இஸ்மாயில், கே. மாதவன்-
க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை புதிய ஆண்டின் கடமைச் செயற்பாடுகள் வைத்திய அத்தியட்சகர் டாக்டர். ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.றஜாப் தலைமையில் வைபவ ரீதியாக தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது ராணுவ வீரர்கள் உள்ளிட்ட நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அனைவரையும் நினைவுகூர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அரச சேவைக்கான உறுதிமொழி சத்திய பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது

"வலுவான எதிர்காலத்துக்கான தொடக்கவுரை" என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்றதுடன், தற்போதைய சவால்களை வெற்றி கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அரச கொள்கைகள் மற்றும் வேலைத் திட்டங்கள் பற்றியும் அந்த குறிக்கோள்களை அடைவதற்கு அரச ஊழியர்களின் பங்களிப்பு மற்றும் வைத்தியசாலை செயற்பாடுகள் பற்றியும் வைத்திய அத்தியட்சகரினால் உரை திகழ்த்தப்பட்டது.

இந் நிகழ்வில், வைத்தியசாலை நிபுணர்கள், வைத்தியர்கள், அனைத்து தர சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், சுகாதார ஊழியர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :