இலங்கையில் மிக பாரதூரமான நெருக்கடியை உருவாக்கி ஆட்சி மாற்றத்தை கொண்டு வர மொசாட் முயற்சிக்கின்றதா ? - கேள்வி எழுப்புகிறார் ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினர்நூருல் ஹுதா உமர்-
ஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்சினை மிக பாரிய உலக நெருக்கடியாக தாண்டவமாடிக்கொண்டிருக்கும் நிலையில் இலங்கையில் நிலவி வருகின்ற டொலர் பிரச்சினைக்கு தீர்வினை எட்டுவதற்காக இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்பி உயிருடன் சென்றவர்கள் மரணித்த உடல்களாக இஸ்ரேலில் இருந்து நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவதையா எமது அரசாங்கம் விரும்புகின்றது என ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான் கேள்வியெழுப்பியுள்ளார்.

இவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கேள்வியெழுப்பினார். மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்சினையானது மிக பாரிய உலகின் நெருக்கடியாக தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இலங்கையில் நிலவி வரும் டொலர் பிரச்சினைக்கு தீர்வை காண இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்புகின்ற தீர்மானம் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

இஸ்ரேலியர்களின் கட்டுப்பாட்டு பிரதேசம் தற்போது பாரிய இரும்புக் கோட்டை போல் உள்ளது. முன்பு இஸ்ரேலியர்களின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு சென்று அங்கு வேலை பார்த்த பாலஸ்தீனர்களுக்கு இப்போது அனுமதி மறுக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாகவே இலங்கையர்களை பணிக்கு அமர்த்த இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளது தெளிவாகிறது.

இஸ்ரேலில் இறந்த இலங்கையர்களின் உடல்கள் சில ஏற்கனவே சில தினங்களுக்கு முன்னர் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவை சிறியளவில் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் வேலைக்காக சென்று அங்கு மரணித்தவர்களின் உடல்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட நேருமானால், மிக மிக மோசமான எதிர்விளைவுகள் நாட்டில் ஏற்பட்டுவிடும். இஸ்ரேலிய உளவுப் படையான மொசாட் திட்டமிட்ட வகையில் இலங்கையில் மிக பாரதூரமான நெருக்கடியை உருவாக்கி ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்கின்றதா என்கிற சந்தேகமும் எமக்கு உள்ளது. மேற்கத்தேய நாடுகளின் ஆசிர்வாதத்துடன் மொசாட்டின் கழுகு பார்வை இலங்கை மீது விழுந்திருக்கிறது என்று சந்தேகிக்கின்றோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பூகோள அரசியலை கரைத்துக் குடித்தவர். அவருக்கு இவற்றை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று கிடையாது. ஆனால், நாட்டுப் பற்றாளர் என்ற வகையில் அவருடைய மேலான கவனத்தை நாம் கோரி நிற்கின்றோம். இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்புகின்ற தீர்மானத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :