இறக்காமம் பிரதேச செயலகத்திண் பாரம்பரிய உணவுகள் மூலம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குதல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (04) திங்கட்கிழமை இறக்காமம்
கமு/சது/அமீர்-அலிபுரம் வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சுகாதார அமைச்சின் சுதேச வைத்திய பிரிவின் கீழ் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.றிஜாஸ் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில் "குரக்கன் கஞ்சி தயாரித்தல் மற்றும் அதனால் கிடைக்கின்ற நன்மைகள்” தொடர்பாக இறக்காமம் ஆயுர்வேத வைத்தியசாலை வைத்தியர் டாக்டர் கே. எல். எம். நக்பர் (CMO) அவர்களால் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.
மேலும், இந் நிகழ்விற்கு இறக்காமம் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே. எல்.ஹம்சார் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குதல் தொடர்பாக விளக்கங்களையும் தெளிவுபடுத்தி இருந்தார்.
இந்நிகழ்வில் விசேட அதிதியாக அப்பாடசாலையின் அதிபர் எஸ்.எம். லாஹிர் கலந்து சிறப்பித்ததுடன் மேலும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
0 comments :
Post a Comment