விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தனதுஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது.

திரையுலக வாழ்க்கைக்கு வரமுன்பும் வந்த பின்பும், அரசியல் வாழ்க்கையிலும்என்றும் தமிழ் மொழி மீதும் தமிழர்கள் மீதும் மாறாத பற்றுக் கொண்டிருந்த‘கப்டன்’ விஜயகாந்த் அவர்கள் இலங்கைத் தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டத்தை உறுதியாக ஆதரித்திருந்ததோடு போராளிகள் அமைப்புகளுடன்ஆத்மார்த்தமான உறவினைக் கொண்டிருந்தார். போராளிகளின் தேவையுணர்ந்துபெறுமதிமிக்க உதவிகளையும் வழங்கியிருந்தார்.
ஈழத்தில் தமிழ் மக்களுக்கு நீண்டு நிலைத்திருக்கக் கூடிய விடுதலை கிடைக்கவேண்டுமெனும் நிலைப்பாட்டினை தனது வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்தஅவரது மறைவு, இலங்கையில் தமிழர்களுக்கு பாதகம் நிகழும்வேளைகளிலெல்லாம் உரிமையுடன் ஆதரவுக் கரம் நீட்டும் தமிழகத்தின் ஆத்மபலத்திற்கு குறிப்பிடத்தக்கதோர் இழப்பாகும்.

கப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவால் துயருற்றிருக்கும் அவரதுகுடும்பத்தினருக்கும், தேசிய முற்போக்கு திராவிடர் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆதரவாளர்களுக்கும் மற்றும் திரையுலத்தாருக்கும் எமதுஅமைப்பின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஊடகப்பிரிவு
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :