வி.ரி.சகாதேவராஜா-
அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் பொலிசாரின் தடைகளை மீறி அஞ்சலி நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.
தாண்டியடி சந்தியிலிருந்து கஞ்சிகுடிச்சாறுசெல்லும் வழியில் பொலிசார் நின்று மக்களை செல்லவிடாது தடைகளை ஏற்படுத்தினர்.
அங்கு விரைந்து சென்ற அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் மற்றும் பிரபல மனித உரிமைகள் சமூக செயற்பாட்டாளர் செல்வராஜா கணேஸ் ஆகியோர் பொலிஸ் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.
அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் தடைகளை மீறிச் சென்று சரியாக மாலை 6.05 மணிக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
அதேபோன்று பெருந்தொகையான மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு முற்பட்ட போது,200க்கும் மேற்பட்ட பொலிசார் தடைகளை வழிநெடுகிலும் ஏற்படுத்தி செல்லவிடாது தடுத்தனர்.
.
இருந்தபோதிலும் சில தாய்மார்கள்மற்றும் உறவுகள் தடைகளை மீறிச் சென்று அழுது கண்ணீர் மல்கி தமது உறவுகளுக்கு அஞ்சலி நிகழ்வை செய்து முடித்தனர். பொலிசாரும் சூழநின்றனர்.
நிகழ்வில் திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான காந்தரூபன் மற்றும் ஜெயா ஆகியோரும் பங்கேற்றனர்.
0 comments :
Post a Comment