தீபாவளி பூப்பந்தாட்ட போட்டி.


வி.ரி. சகாதேவராஜா-
தீபத்திருநாளை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் 40 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டும் நடத்திய மாபெரும் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியும் பரிசளிப்பு விழாவும் நேற்றுமுன்தினம்(12)நடைபெற்றது.

கழகத் தலைவர் தம்பிராசா தவக்குமார் தலைமையில், விபுலானந்தா மத்திய கல்லூரி பூப்பந்தாட்ட அரங்கில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்,
பிரதம அதிதியாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்று பொறியியலாளரான பட்டய பொறியாளர் எந்திரி அருமைநாயகம் லிங்கேஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக, கழகத்தின் போசகர்களான காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன், உத்தரவு பெற்ற நில அளவையாளர் வே.இராஜேந்திரன், உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெற்றி கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன .

கழகச் செயலாளர்
எஸ் .கிரிசாந்த் நிகழ்ச்சிகளை தொகுத்து நன்றியுரை வழங்கினார்.

சுற்றுப்போட்டிக்கான அனுசரணையை பட்டயப் பொறியியலாளர் ஏ.லிங்கேஸ்வரன் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :