சமுர்த்தி வங்கிக்கு நிரந்தர காணி கையளிப்பு.


நூருல் ஹுதா உமர், சர்ஜுன் லாபீர்-

ல்முனை பிரதேச நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கிக்கான நிரந்தர காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (18) கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இவ் உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், முன்னாள் இராஜங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டதுடன் பிரதேச செயலக கணக்காளர் கே.எம்.ஏ அமீர் அலி, சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலீஹ், முன்னாள் மாநகர சபை உறுப்பினரும், விரிவுரையாளருமான எம்.ஏ. கலீலூர் ரஹ்மான், கல்முனை சமுர்த்தி மகா சங்க முகாமையாளர் எம்.என் நெளஸாத், நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஏ.எம் பைசால், உதவி முகாமையாளர் யூ.எல் தெளபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :