கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியலயத்திற்கு கள விஜயம்ஆதிப் அஹமட்-
கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் செல்வி.அகிலா கனகசூரியம் அவர்கள் களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டு மட்/மம/ ஹிழுறிய்யா வித்தியாலத்திற்கு இன்று(10) வருகை தந்தார்.

பாடசாலையின் பல்வேறு விஷேட செயற்திட்டங்கள், செயற்பாடுகள், அடைவுகள், சாதனைகள் மற்றும் பௌதீக வளங்கள் தொடர்பில் முழுமையாக கல்விப்பணிப்பாளர் ஆய்வு செய்ததோடு பல்வேறு முன்மாதிரியான விடயங்களுக்காக தன்னுடைய விஷேட வாழ்த்துக்களை குறிப்பாக அதிபருக்கும் பாடசாலை சமூகத்துக்கும் தெரிவித்துக்கொண்டார்.

மேலும் இப்பாடசாலையை அவதானித்த பின்னர் இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாகாணக்கல்விப்பணிப்பாளர், இப்பாடசாலையானது குறுகிய காலத்தில் பெரும் அடைவுகளை கண்டுள்ளமை தொடர்பிலும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் முன்மாதிரியான பாடசாலையாக திழ்கின்றமையை இட்டு தான் பெருமகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்ததுடன் தான் பல்வேறு நாடுகளுக்கு கல்வி விஜயங்களை மேற்கொண்டுள்ளதுடன், வெளிநாடுகளை ஒத்த பல்வேறு செயற்பாடுகளை இப்பாடசாலை கொண்டிருப்பது தொடர்பிலும் தான் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார். மேலும் இந்த முன்மாதிரி பாடசாலையை மாகாணத்தின் பல்வேறு பாடசாலைகளையும் விஜயம் செய்து பார்வையிடுவதற்கான கோரிக்கைகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அதிபருக்கு பணிப்புரை விடுத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த பாடசாலையின் அதிபர் S.I.யஸீர் அறபாத் அவர்கள் சகல பாடசாலைகளும் விஜயம் செய்து பார்வையிடுவதை தான் மனமுவந்து வரவேற்பதாகவும் தங்கள் பாடசாலையை முன்மாதிரியாகக் கொண்டு கிழக்கு மாகாணத்தின் சகல பாடசாலைகளும் இச்செயற்திட்டங்களை முன்னெடுக்க மாகாணக்கல்வித்திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

இக்கள விஜயத்தில் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் S.M.M.அமீர் அவர்களும் முகாமைத்துவத்துக்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் M.H.M.றமீஸ் அவர்களும் இணைந்திருந்தனர்.

இதன்போது மாகாணக்கல்விப்பணிப்பாளருக்கு பாடசாலை சமூகம் சார்பாக நினைவுச்சின்னமொன்றும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர், பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :