ஓந்தாச்சிமடம் அரசடி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்.


வி.ரி. சகாதேவராஜா-


வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஓந்தாச்சிமடம் அரசடி விநாயகர் ஆலய பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் இன்று ஆறாம் தேதி புதன்கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகிறது.

9 ஆம் தேதி சனிக்கிழமை காலை 7 மணி முதல் எண்ணைய்க்காப்பு சாத்தும் நிகழ்வு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இடம் பெறும் .

தொடர்ந்து 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை சுபமுகூர்த்த வேளையில்
மகா கும்பாபிஷேகம் இடம் பெற இருக்கின்றது.

தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று 21ஆம் தேதி வியாழக்கிழமை 1008 சங்குகளுடன் கூடிய சங்காபிஷேகமும் வீதியுலாவும் இடம்பெறும் .

பிரதிஷ்டா பிரதம குரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தமூர்த்திக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேக கிரியைகளை தொடர்ந்து மேற்கொள்வார்கள் என்று ஆலய பரிபாலன சபையின் தலைவர் த.சற்குணானந்தன் செயலாளர் வி.காந்தகுமார் ஆகியோர் தெரிவித்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :