அம்பாறை மாவட்டத்தில் கடலரிப்பைத் தடுக்க கருங்கல் தடுப்பு சுவர் நிர்மாணம்அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் மற்றும் நிந்தவூர் பிரதேசங்களில் ஏற்பட்டு வரும் கடலரிப்பை தடுப்பதற்காக கடற்கரை ஓரங்களில் கருங்கல்லிலான தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகின்றது.

அண்மைக்காலமாக திருக்கோவில் மற்றும் நிந்தவூர் பிரதேசங்களில் கடலரிப்பை நிதந்தரமாக தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கடலோரம் பேணல் மற்றும் கடல் மூலவள முகாமைத்துவ திணைக்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.ஜெஸூர் தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில் கடலரிப்பை தடுப்பதற்காக முதற்கட்டமாக ஏற்கனவே தற்காலிக மணல் மூடை இடப்பட்டுள்ளதாக இணைப்பாளர் மேலும் தெரிவித்தார்.

கடலரிப்பு தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதால் அப்பிரதேசத்தில் வாழும் பொது மக்களும், மீனவர்களும் பலவிதமான அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதோடு பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசங்களிலும் இவ்வாறான பாரிய கடலரிப்பு காரணமாக கடலோர பிரதேசங்கள் நாளுக்கு நாள் காவு கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :