சதுரங்க போட்டி வரலாற்று சாதனையாளர்களை கெளரவித்த மஹ்மூத் கல்லூரி சமூகம்




அஸ்ஹர் இப்றாஹிம்-
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்க போட்டியில்
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவிகள் திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண மட்ட சதுரங்க போட்டியில் 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் முதல் இரண்டாம் இடத்தினை (01st Runnerup) பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மாகாணமட்ட சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை கெளரவப்படுத்தும், ஊக்கப்படுத்தும் நோக்கில் மஹ்மூத்
கல்லூரி கல்வி சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு வைபவம் கடந்த திங்கட்கிழமை கல்லூரியின் அதிபர் யூ.எல்.எம். அமீன் தலைமையில் இடம் பெற்றது.

மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலய கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபிர் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் சாதனை மாணவிகள் பாடசாலை முன்றலில் பூ மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டதுடன் வெற்றி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதி அதிபர் (நிருவாகம்) ஹாஜியானி. சமதா மசூது லெவ்வை, உதவி அதிபர்களான ஏ.எச். நதீரா, எம்.எஸ். மனுனா, என்.டி. நதீகா, விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள், பொறுப்பாசிரியர்கள் ஆகியோர் புடை சூழ வெற்றி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் சதுரங்க போட்டிகளுக்கு மாணவிகளை பயிற்றுவித்த சாஹிறா கல்லூரியின் ஆசிரியர்களான எம்.வை.எம்.றகீப், எஸ்.எல்.எம். சுஹ்தான் ஆகியோர் விஷேடமாக வரவேற்பு நிகழ்வுக்கு அழைக்கப்பட்டு கல்லூரி சார்பான நன்றிகளை தெரிவித்ததுடன் அன்பளிப்புகள் கல்லூரியின் அதிபர் அவர்களினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கும், இணைப்பாடவிதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் ஏ.எச். நதீரா, மாணவிகளை பயிற்றுவித்த எம்.வை.எம்.றகீப், எஸ்.எல்.எம். சுஹ்தான், போட்டிக்காக அழைத்துச் சென்ற பொறுப்பாசிரியர்கள், உடற்கல்வி பாட ஆசிரியை எம்.ஜ. ரஃபீக்கா பீவி (தரம் - 07 பகுதித் தலைவி), எம்.ஜ. சாமிலா (தரம் - 08 பகுதித் தலைவி), உடற்கல்வி பாட ஆசிரியர்களான எம்.ஆர்.எம். றப்கான், எம்.எம். றிசான், ஆர்.எம். அஸ்மி, நூலக பொறுப்பாளர் ஏ.எல். நளீம், சிங்கள பாட ஆசிரியர் ஏ.எம்.எம். அணிஸ் மற்றும் மாணவிகளை ஊக்கப்படுத்திய பெற்றோர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக கல்லூரி அதிபர் யூ.எல்.எம். அமீன் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :