மட்டக்களப்பு எல்லையில் இன முறுகல்! அமைச்சரின் அசண்டையீனம்!-இரா.சாணக்கியன்ன்றைய தினம் காலை பாராளுமன்றத்தில் மகாவலி அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் ரோஷன் ரணசிங்கவிடம் காணிப் பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கையினை முன்வைக்கும் போது நான் ஆணித்தரமாக முன்வைத்த விடையம் அமைச்சரின் அசண்டையீனம் காரணமாக இனங்களுக்கு இடையில் காணிகள் சம்பந்தமான குறிப்பாக மயிலத்தமடு - மாதவனை பகுதிகளில் இன முரண்பாடு தோன்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று அறிவுறுத்தியிருந்தேன். அதே போல் இன்றிய தினம் அமைச்சரின் அசண்டையீனம் காரணமாக மட்டக்களப்பு எல்லையில் சர்வமத தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிறைப்பிடிக்கப்படுள்ளார்கள்!!

இதற்கான முழுப் பொறுப்பையும் அமைச்சர் ஏற்க வேண்டும். மக்களுக்கு சேவை ஆற்ற அன்றி இன முறுகலுக்கு வித்திடுகின்றனர் அரச சார் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்மாரும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு வருகைதந்த பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை. பௌத்த மதகுரு தலைமையிலான காணி அபகரிப்பு குழு வானது சிறைப்பிடித்துள்ளது.

பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சனைகளை பார்வையிட்டு அவற்றை கேட்டறிவதற்காக களவிஜயம் மேற்கொண்டு பண்ணையாளர்களுடன் கலந்துரையாடலினை முன்னெடுத்தனர். இதன் பிற்பாடு பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்து மீண்டும் திரும்பி செல்லும்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக காணிகளை பிடிப்பவர்கள் மற்றும் பௌத்த மதகுரு ஒருவரும் இனைந்து அணைவரையும் வரும் வழியில் மறித்து சிறைபிடித்துள்ளனர். இவர்களின் அடாவடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் அதே வேளை சிறைப்பிடிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது பொலிஸ் மட்டங்களிலும் Senior DIG உடனும் இவை தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :