உலக குடியிருப்பு தினத்தையொட்டி தேசிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கான சித்திர மட்டும் கட்டுரைப் போட்டிகள்அஸ்ஹர் இப்றாஹிம்-
லக குடியிருப்பு தினத்தையொட்டி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையே சித்திரம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்த தீர்மானித்துள்ளது.

எமது எதிர்கால குடியிருப்பு, நகரமொன்றில் எதிர்கால வீடமைப்பில் இளைஞர்களின் பங்களிப்பு, ஆரோக்கியமான நகர வாழ்க்கைக்கு திட்டமிடப்பட்ட குடியிருப்பு, பாதுகாப்பான மனித குடியிருப்பின் மூலம் எதிர்கால நகர உருவாக்கம் ஆகிய தொனிப் பொருளில் அல்லது சகல தொனிப்பொருளையும் உள்ளடக்கியதாக சித்திரம் அல்லது கட்டுரை ஆக்கம் செய்யப்பட வேண்டும்.

அரச மற்றும் தனியார் பாடசாலை மாணவர்கள் மட்டும் பங்குபற்ற முடியும் ஆனால் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி சபை ஊழியர்களின் பிள்ளைகள் பங்குபற்ற முடியாது.

சித்திரப் போட்டிகள் முதலாம் பிரிவு 3,4,5 ஆம் தரத்திலுள்ளவர்களும், இரண்டாம் பிரிவு 6,7,8,9 ஆம் தரத்திலுள்ளவர்களும், மூன்றாம் பிரிவு 10,11,12,13, தரத்திலுள்ளவர்களும் 17 x 22 அங்குல காகிதத்தாளில் வரைந்து பெஸ்டல், நீர்ச்சாயம், பென்சில் போன்ற நிறங்களை பயன்படுத்தலாம்.

கட்டுரைப் போட்டி தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை உள்ளடக்கியதாக தரம் 6,7,8,9 மாணவர்கள் 300 சொற்களை கொண்டதாகவும், தரம் 10,11,12,13 மாணவர்கள் 500 சொற்களை கொண்டதாகவும் அமைய வேண்டும்.

வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதற் பரிசாக 15,000 ரூபாவும் கிண்ணமும், இரண்டாம் பரிசாக 10,000 ரூபாவும் கிண்ணமும், மூன்றாம் பரிசாக 7,500 ரூபாவும் கிண்ணமும், திறமைக்காக 3 ,000 ரூபா பெறுமதியான ஆறுதல் பரிசில்களும் வழங்கப்படவுள்ளது.

விண்ணப்பப்படிவங்களை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட காரியாலயத்தில் அல்லது www.nhda.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பாடசாலை அதிபரின் சிபாரிசுடன் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு முன் உதவி பொது முகாமையாளர் ( தகவல் மற்றும் பிரச்சாரப் பிரிவு) , தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, 7வது மாடி, சேர் சிற்றம்பலம் கார்டினர் மாவத்த, கொழும்பு. 02 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :