சாய்ந்தமருதில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு..!நூருல் ஹுதா உமர், யூ.கே.காலிதீன்-
டெங்கு கட்டுப்பாட்டு வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (06) சாய்ந்தமருதில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்களின் ஆலோசனை, வழிகாட்டலில் காலை 7.00 மணி தொடக்கம் மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசங்களில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான அடையாளம் காணப்பட்ட பல இடங்களில் டெங்கு ஒழிப்பு சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

சாய்ந்தமருது பொலிஸார், மாநகர சுகாதாரப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எம்.இஸ்ஹாக், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் மாநகர திண்ம கழிவு முகாமைத்துவ மேற்பார்வையாளர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இவ் வேலைத் திட்டத்திற்கு பிரதேச சுகாதார வைத்திய பணிமனை, பொலிஸ் உள்ளிட்ட சில அரச திணைக்களங்கள் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :