மனித மேம்பாட்டு அமைப்பின் தன்னார்வலருக்கான உத்தியோபூர்வ பொறுப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கும் செயற்திட்டம்நூருல் ஹுதா உமர்-
னித மேம்பாட்டு அமைப்பின் தன்னார்வலருக்கான உத்தியோபூர்வ பொறுப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கும் செயற்திட்டம் அமைப்பின் தலைவர் எஸ். ஏ. முகம்மட் அஸ்லம் தலைமையில் சாய்ந்தமருது கமு /கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளரும் அமைப்பின் தேசிய அமைப்பாளருமான ஐ. எல். எம். இர்பான், மூத்த செய்தி நிருபரும், அமைப்பின் பிரதி தலைவருமான எம். ஐ. சம்சுதீன், அமைப்பினுடைய உயர்பீட உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், அமைப்பின் கீழ் இயங்கும் பிரிவுகளின் தலைவர்கள் என்று பலர் பங்கேற்றன.

இதன் போது கடந்த காலங்களில் இவ் அமைப்போடு இணைந்து செயற்பட்டு வந்த அமைப்பின் பிரதேச அமைப்பாளர்கள், HDA ஸ்ரீலங்காவின் கீழ் இயங்கும் பிரிவுகளின் தலைவர்களுக்கு உத்தியோகபூர்வ பொறுப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளை அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் ஐ. எல். இர்பான் அவர்கள் வழங்கி உத்தியோகபூர்வமாக அமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டதோடு எதிர் கால செயற்திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :