தாய்நாட்டின் பொருளாதாரம் ஓங்கி நிம்மதியாக வாழ்ந்து நாட்டில் சுபீட்சம் ஓங்க அனைவரும் இப் புனிதமிகு நாளில் பிராத்திப்போம்.-நளீர்லர்ந்துள்ள  தியாகத் திருநாளில் அகிலமெங்கும் அல்லாஹ்வின் அருள் மழை பொழியட்டும் என நளிர் அவர்கள் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

ஒவ்வொரு வருடமும் நாம் கொண்டாடும் ஹஜ் பெருநாளானது எமக்கு பல விடயங்களை போதித்துச் செல்கிறது. இறைத்தூதர் இப்றாஹிம் அலைஹிவஸல்லம் அவர்கள் ஏக இறைவனுக்கு எதையும் இணைவைந்து விடக்கூடாது என்பதற்காக பட்ட கஷ்டங்களை நாம் வாழ்வில் ஒரு கணமேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இறைவனின் வார்த்தை அவர்காட்டிய மதிப்பும் மரியாதையும் இன்று வரை கோடானு கோடி மக்களை புனித மக்காவை நோக்கி நகரவைத்துள்ளது என்பதை எண்ணும் பொழுது பக்தி மேலிடுகிறது.
இறைத்தூதர் இப்றாஹிம் அலைஹிவஸல்லம் அவர்களும் அவர் குடும்பமும் அல்லாஹுக்காக பட்ட துயரங்களையும், பிரயத்தனங்களையும், தியாகங்களையும் ஹஜ் கடமைகளாக ஹாஜிகள் அனுஷ்டிக்கின்றனர்.

இந்த தியாகத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும் ஹஜ்ஜுப் பெருநாள் இந்த உலகிற்கு அமைதியையும் சமாதானத்தையும் பரிசளித்துச் செல்லட்டும்
உலகெலாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு எனது இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துகள் உரித்தாகுக.

ஸ்தாபக தலைவர்
நளீர் பவுண்டேஷன்
LFRO
கிழக்கு மாகாண தலைவர்
C M T Campus
Directorஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :