தொழிற்சங்க போராட்டங்களில் பொது மக்களும் இணைய வேண்டும்-எம்.எம்.மஹ்தி



ரி அதிகரிப்பு, நீர், மின் கட்டண அதிகரிப்பு போன்ற அரச பயங்கர வாதத்த்திற்கு எதிராக முன்னெடுக்கப் படும் அனைத்து தொழிற் சங்கங்க நடவடிக்கைகளுக்கும் நாட்டு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று (13) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. தொடர்ந்தும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

திராணியற்ற நிருவாகம், ஊழல், மோசடி போன்றவற்றால் நாட்டையும் நாட்டுமக்களையும் நாசம் செய்து பொருளாதாரத்தையும் அதள பாதாளத்தில் தள்ளிய மோசடிக் காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து நாட்டை மீட்பதற்கு பதிலாக நாட்டு மக்கள் மீது வரிகளை சுமத்தி நீர், மின் கட்டணங்களோடு விலைகளையும் அதிகரித்து விளையாடுகின்றது இந்த அரசு.

ஆட்சியாளர்களும், அமைச்சர்களும் செய்த குற்றங்களுக்காக நாட்டு மக்களுக்கு தண்டனை வழங்குவதில் என்ன நியாயம் இருக்கின்றது?

எனவே இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் பாதாளத்திற்குள் தள்ளிய இந்த அராஜக அரசுக்கு எதிராக அரங்கேறும் அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் நாமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவ் அறிக்கையினூடாக மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :