கொழும்பு 10ல் உள்ள முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களத்தின் முதலாம் மாடியில் முதன்முறையாக ஹஜ் விடயங்களை கவணிப்பதற்காக தனியானதொரு ஹஜ் விவகார அலுவலகமொன்று செவ்வாய்க்கிழமை 21ஆம் திகதி பௌத்த விவகார மதவிவகாரங்கள் மற்றும் கலாச்சார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வினை முஸ்லிம் சமய பண்பாட்டுத் திணைக்களமும் ஹஜ் கமிட்டி மற்றும் ஹஜ்முகவர்கள் சங்கத்தின் தலைவர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பிணர்களான பைசால் காசீம், முசாரப், மர்ஜான் பழீல் . இசாக் ரஹ்மான் , ஹஜ் கமிட்டியின் தலைவர் இப்றாஹீம் அன்ஸார், முஸ்லிம் சமய பண்பாட்டு அவுலுவல்கள் திணை்க்களத்தின் பணிப்பாளர் எஸ்.ஏ.எம். பைசல் ஹஜ் கமிட்டியின் உறுப்பிணர்களும் கலந்து சிறப்பித்தனர்
இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த அமைச்சர் விதுர விக்கிரமநாய்கக
இலங்கை முதற்தடவையாக ஹஜ் விவகாரங்களுக்காக திணைக்களத்தில் அலுவலகமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களது ஜம்பெரும் கடமையான ஹஜ் யாத்திரிகைக்காக கடந்த காலங்களில் முகவர்கள் ஊடாக பல்வேறு குளருபடிகள் இருந்தன. இலங்கைக்கு கிடைக்கும் விசாக்களை பல இலட்சங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டன அவ்வாறான குளருபடிகளை தடுப்பதற்காகவே இந் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இம்முறை இலங்கை முஸ்லிம்களுக்காக 3500 விசாக்கள் கிடைக்கும். என நம்புகின்றேன்..கடந்த 2 வருடங்சகளாக கொவிட் தொற்று காரணமாக ஹஜ் செய்வதற்கு சர்ந்தர்ப்பம் கிடைக்கவில்லை. என அமைச்சர் கருத்துத் தெரிவித்தரர்
அத்துடன் இச் நிகழ்வின்போது சவுதி அரேபியாவினால் இலங்கைக்கு வழங்கிய பேரித்தபழப் பொதியொன்றும் கெசல்வத்தை பள்ளிவாசல் தலைவரிடம் அமைச்சரினால் கையளிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment