கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட மீராவோடை உதுமான் வித்தியாலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.பி.முபாரக் தலைமையில் மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி வெட்டுப் புள்ளிகளை தாண்டிய மற்றும் சிறப்புப் புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள் பாராட்டி நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வின்போது, கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையை திறன்பட வழி நடாத்தி வரும் அதிபர் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளரும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளருமான வீ.ரி.அஜ்மீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன், ஏனைய அதிதிகளாக பிரதி, உதவி கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், பள்ளிவாசல்களின் தலைவர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment