வீட்டுத் தோட்டம் வெற்றியளிப்பினை பார்வையிட்ட புலம்பெயர்வாளர்கள்



ஹஸ்பர்-
நாமே நமக்கு (இலங்கை, இலண்டன், வேல்ஸ்) பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் வீட்டுத்தோட்ட செயற்திட்டம், கடந்த காலங்களில் திருகோணமலை, தம்பலகமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பத்தினிபுரம் மற்றும் புதுக்குடியிருப்பு போன்ற கிராமங்களில் Trinco Aid னால் ஒழுங்கு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதனை ஒட்டி J/St.John's College 81 A/L பழைய மாணவர்கள் இன்று (10.03.2023) கிராமத்தினை பார்வையிட வருகை தந்திருந்தனர். அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட கிராம மக்களுக்கு விட்டுத்தோட்டத்திற்கான காய்கறி விதைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் J/St.John's College இன் 40 மேற்பட்ட மாணவர்கள் பல நாடுகளில் இருந்து வந்து பங்குபற்றியமை குறிப்பிடதக்கது.

தம்பலகமம் பிரதேச செயலாளர் திருமதி.ஜெயகெளரி ஸ்ரீபதி அவர்கள் இந்நிகழ்வை தலைமை ஏற்றார். அவர்களோடு கிராம பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர்கள், கிராம மக்கள், Trinco Aid இன் ஸ்தாபகர், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வை சிறப்புற செய்த Trinco Aid ஊழியர்களுக்கும், நிகழ்விற்கான உணவு, பரிசு பொருட்களை ஏற்பாடு செய்த கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர், கிராம மக்கள், கலந்து சிறப்பித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்..







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :