மாணவர்களின் கலை நிகழ்ச்சியுடன் கூடிய இந்நிகழ்வுக்கு சுங்க திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் சட்டத்தரணி ஆதம்பாவா ஜலீல் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்ததுடன் உரையாற்றினார். அவரது உரையில் குறித்த மாணவர்களின் திறமைகளை பாராட்டியதுடன் முஸ்லிம்கள் வியாபாரத்துக்கே பொருத்தமானவர்கள் என்ற கோட்பாட்டை உடைத்து கல்வியிலும் முன்னேறிச் செல்வது மகிழ்ச்சியான விடயம் என்றும்; இப்போதைக்கு பெற்றோர் தங்களது குழந்தைச் செல்வங்களை என்ன விலை கொடுத்தாவது, கல்வியின் பால் வழிநடத்துவதை காணக்கூடியதாக உள்ளது என்றும்; மாணவர்களை ஆரம்பத்திலிருந்தே இவ்வாறான செயற்பாடுகள் மூலம் முன்கொண்டு செல்வதனூடாக எதிர்காலத்தில் சிறந்த கற்ற சமூகம் ஒன்றை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
நிகழ்வுக்கு விஷேட அதிதியாக சாய்ந்தமருது கோட்ட கல்விப்பணிப்பாளர் என்.எம்.அப்துல் மலீக் அவர்களும் கௌரவ அதிதியாக சாய்ந்தமருது உப பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.முவாபிக்கா அவர்களும் கலந்து கொண்டார்.
அல்ஹிலால் வித்தியாலயத்தின் அதிபர் யு.எல்.நஸார் அவர்களுடன் வை.திருப்பதி(ECDO), என்.எம்.எஸ்.சிறீன்(ECDO) மற்றும் ஏ.எம்.ஆயிஷா (ECDO) ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வின்போது பிர்லியண்ட் பாலர் பாடசாலையின் 9 வது அணியில் கல்வி கற்று வெளியேறிய மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment