சாய்ந்தமருதில் அஹதியா பாடசாலைகளை முன்னேற்றுவது சம்மந்தமான மீளாய்வுக் கூட்டம் !


எம்.என்.எம்.அப்ராஸ்-
சாய்ந்தமருதில் அஹதியா பாடசாலைகளை முன்னேற்றுவது சம்மந்தமான மீளாய்வுக் கூட்டம் சாய்ந்தமருது தாறுல் குரர் ஆனியா அஹதியா சம்மேளனத்தின் தலைவர் அஷ் செய்க் ஏ.எம்.அன்ஸார் தலைமையில் (11 ) அல் ஹிலால் வித்தியாலய கூட்டப மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டத்திற்கு அல் ஹிலால் அஹதிய்யா பாடசாலை, அஸ் சபீனா அஹதிய்யா பாடசாலை மற்றும் தாறுல் குர்ஆனியா அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்கள் நிர்வாகத்தினர் கலந்து கொண்டிருந்தனர்

இதன் போது சாய்ந்தமருதில் அஹதிய்யா பாடசலைகள் ஆரம்பித்து 30 வருடமாகியும் அஹதியா பாடசாலையின் முக்கியத்துவம்,தற்கால மாணவ மாணவிகளில் பலர் மார்க்கக் கல்வியை சீராக கற்று அதன்படி நடந்து கொள்ளாததன் காரணமாக பல்வேறு வேண்டப்படாத சிக்கல்களுக்குள் சிக்கித்தவிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

ஞாயிற்றுக் கிழமைகளில் இடம்பெறும் சமயம் சார் அஹதிய்யா பாடசாலைகளில் இணைந்து கொண்டு மார்க்க ரீதியான கல்வி உள்ளிட்ட அறிவைப் பெற முஸ்லிம் மாணவர்கள் அஹதிய்யா பாடசாலைகளை பயன்படுத்த முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதன் ஒரு அங்கங்கமாக ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் மேலதிக வகுப்புக்களை நாடாத்துவ தொடர்பான முக்கியமான தீர்மானம் ஒன்றை பிரதேச செயலாளர், பள்வாசல் நிர்வாகம், தாறுல் குரர் ஆனியா அஹதியா சம்மேளனத்தின் நிர்வகம் மற்றும் தனியார் மேலதிக வகுப்புக்களை நாடாத்தும் நிர்வாகதினருடன் இணைந்து எடுப்பது காலச் சிறந்தது என்ற முடிவும் எடுக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :