சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் இடைவிலகிய மாணவர்கள் பற்றிய கலந்துரையாடல்




அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் கல்வியிலிருந்து இடைவிலகிய மாணவர்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (2023.02.08) சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.எம்.அப்துல் மலீக் அதிகாரி , கல்முனை வலயக் கல்விப் பணியகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஆசிரிய ஆலோசகர் ஏ.றாஸிக் , கல்லூரியின் அதிபர் எம்.ஐ.ஜாபிர்
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் உப பிரதேச செயலாளர், பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவின் உறுப்பினர்கள், கிராம சேவகர்கள், கல்லூரியின் பிரதி அதிபர், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் டொக்டர் டில்ஸான் நிஸாம் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.

இக்கூட்டத்தின்போது, பாடசாலைக் கல்வியிலிருந்து இடைவிலகிய மாணவர்கள் தொடர்பான மேலதிக தரவுகளை, பிரதேச செயலாளரின் பணிப்புரைக்கமைய கிராம சேவகர்கள் முன்னரே திரட்டியிருந்த நிலையில், அவை இக்கூட்டத்தில் விரிவாக பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டது.

இவ்வாய்வுகளின் அடிப்படையில் திட்ட வரைபொன்று முன்மொழியப்பட்டதுடன், குறித்த செயற்றிட்டத்தை மிக விரைவில் முன்னெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இடைவிலகிய மாணவர்கள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில், கல்லூரி அதிபரினால் சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேச செயலகங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த வேண்டுகோளின் பின்னணியில் இக் கூட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :