ஏறாவூர் சாதிக் அகமட்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் மலை உச்சியில் உள்ள உலகத்தில் தொன்மை மொழியான செந்தமிழ் ஆகமத்தில் நடைபெறும் ஒரே ஒரு திருக்கோயில் மயில்தங்கியமலை நந்தீச்சரர் திருக்கோயில் ஆகும்.
சைவத்தமிழர்கள் தமிழால் பூசைகள் செய்து வழிபடும் இத் திருக்கோயிலில் வருடத்தில் ஒருமுறை வருகின்ற பெருஞ்சிவனிரவு (சிவராத்திரி) மிகவும் சிறப்பாக நடைபெறும். அதிலும் செந்தமிழில் வேள்விகள் (யாகம்) பூசைகள் செந்தமிழாகம அருச்சுனைஞர்களால் நடைபெறும்.
இதேவேளை வந்தாறுமூலை நிர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து 18/02/2023 சனிக்கிழமை காலை மலை உச்சியில் உள்ள சிவபெருமான் திருக்கோயில் நோக்கி காலை 6.30 மணிக்கு புனித பாதயாத்திரை ஆரம்பமாகி உப்போடை பிள்ளையார் ஆலய தரிசனம் தொடர்ந்து கிடாக்குழி பிள்ளையார் ஆலய தரிசனம் அத்துடன் சிவத்தம்பாலத்தடி பிள்ளையார் ஆலய தரிசனம் பெற்று பின் மயிலவட்டவான் பிள்ளையார் ஆலய தரிசனம் அத்துடன் முந்தன்குமாரவெளி நாகதம்பிரான் ஆலய தரிசனம் பெற்று எம்பெருமான் திருக்கோயிலை சென்றடைவர்.
சிவராத்திரி நாளில் பிரதோச விரதமும் இணைந்து வருவது மிக மிக சிறப்பான ஒரு நாளாக உள்ளது
இதே வேளை அன்றையதினம் திருக்கோயிலிலே சிவன் அடியார்களாலும் திருக்கோயிலாலும் அன்னதானம் ஏற்பாடுகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிலையில்
அன்று இரவு ஆன்மீக கலை நிகழ்வுகளும் மலை உச்சியில் மிகவும் சிறப்பாக நடைபெற இருக்கிறது. எனவே அன்பின் சிவன் அடியார்களே வருடத்தில் முதலாவதாக வரும் இந்த புனித பாதயாத்திரையில் தாங்களும் கலந்து கொண்டு எம் பெருமானை வணங்க அன்போடு அழைக்கிறோம்.
0 comments :
Post a Comment