மாணவர்கள் மத்தியில் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் விசேட செயலமர்வொன்று இடம்பெற்றது.
இலங்கை குடும்பத்திட்ட சுகாதார சேவை நிலையத்தின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதில், வளவாளர்களாக இலங்கை குடும்பத்திட்ட சுகாதார சேவை நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் எஸ்.எச்.இம்தியாஸ், வாழைச்சேனை மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.எம்.நௌபர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் உண்ணக்கூடிய உணவு வகைகள் தொடர்பாகவும் அதன் நலன்கள் பற்றியும் விளக்கமளித்தனர்.
பாடசாலையின் பகுதித் தலைவர் கே.ஆர்.எம்.இர்ஷாத், ஆசிரியை எம்.எப்.சிபானி ஆகியோரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாணவிகளுக்கு இலைக் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது.

0 comments :
Post a Comment