கண்டி மாவட்ட 14 வயதுப் பிரிவு மைலோ உதைபந்தாட்ட சம்பியன் கிண்ணம் கலகெதர ஜப்பார் கல்லூரி வசம்




அஸ்ஹர் இப்றாஹிம்-
14 வயதின் கீழான கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான மைலோ உதைப்பந்தாட்ட சம்பியன்சிப் போட்டித் தொடரானது அண்மையில் மடவள மதீனா தேசிய பாடசாலையின் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

மேற்படி போட்டித் தொடரில் கலகெதர ஜப்பார் கல்லூரி அணி உட்பட கண்டி புனித திருத்துவக் கல்லூரி, கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி வெஸ்வுட் கல்லூரி, ஸாஹிரா கல்லூரி , கலகெதர மத்திய கல்லூரி, பண்டாரநாயக்க கல்லூரி, மடவள மதீனா தேசிய கல்லூரி , கண்டி மாதிரி (Model) கல்லூரி, சித்தி​லெப்ப ம.ம.வி, ஹில்கண்ட்ரி வித்தியாலயம், அஸ்சிராஜ் வித்தியாலயம் என்பன பங்கேற்றிருந்தன.

மேற்படி போட்டித் தொடரில் முதலில் கலகெதர ஜப்பார் அணியினர் கண்டி சித்திலெப்பே அணியினரை 4-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன் காலிறுதி போட்டியில் கலகெதர மத்திய கல்லூரியை 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்குக்கு முன்னேறியது.

அரையிறுதிச் சுற்றில் திறமையாக விளையாடிய ஜப்பார் அணி 3-2 கோல் வித்தியாசத்தில் ஸாஹிரா கல்லூரியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குத் தெரிவாகியதுடன் இறுதிச் சுற்றுப் போட்டியில் மடவள மதீனா தேசிய கல்லூரியை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி கண்டி மாவட்ட மைலோ கிண்ண சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது.

அத்தோடு ஜப்பார் அணியானது மத்திய மாகாண ரீதியான போட்டித் தொடரில் பங்குபற்றும் வாயப்பையும் தனதாக்கிக் கொண்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :