நோர்வூட் பிரதேசசபையின் அரச உத்தியோகத்தர்களை அச்சுறுத்திய நபரை கைதுசெய்யுமாறு கோரி நோர்வூட் பிரதேசசபை உததியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம் .



பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்-
நோர்வூட் பிரதேசசபையின் உத்தியோகத்தர்களின் சேவைக்கு இடையூறுரினை ஏற்படுத்தி உத்தியோகத்தர்களை அச்சுறுத்திய நபரை கைது செய்யும்மாறு கோரி 13.01.2023. வெள்ளிக்கிழமை காலை நேர்வூட் பிரதேசசபையின் உத்தியோகத்தர்கள் பணிபகிஷ்கரிப்பல் ஈடுபட்டதோடு நோர்வூட் பிரதேசசபை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது இன்று காலை 08.30 மணியில் இருந்து காலை 11மணிவரை முன்னெடுக்கக்பட்டது.இதன் போது உள்ளுராட்சி
சட்டங்களை மதிக்க தெரிந்துக்கொள்,கைது செய்ய செய் அரச உத்தியோகத்தர்களை அச்சுறுத்தியவர்களை கைது செய், நிலைநாட்டு நிலைநாட்டு சட்டத்தை நிலைநாட்டு , பாதுகாப்பு தரப்பே அரசியலுக்கு அடிபணியாதே, போன்ற கோஷங்களையும் பாதாதைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர் .

இம் மாதம் 11ம் திகதி செவ்வாய்கிழமை புளியாவத்தை பகுதியில் உள்ள கோழி இறைச்சி கடை ஒன்று அனுமதி பத்திரம் பெறாது கோழி இறைச்சி விற்பனை செய்யபடுவதை அறிந்த நோர்வூட் பிரதேசசபை உத்தியோகத்தர்களை அந்த பகுதியில் உள்ள நபர் ஒருவரினால் அச்சுறுத்தப்பட்டு தகாத வார்தைகளால் பாவிக்கப்பட்டமை மற்றும் சேவைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் நோர்வூட் பிரதேசசபையின் செயலாளரினால் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைபடபாடு பதிவு செய்யப்பட்டு இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையில் சம்பநதப்பட்ட நபர் இதுவரையிலும் கைது செய்யப்பட்வில்லை எம்மை அச்சுறுத்திய நபரை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் மென வலியுறுத்தியும்
தமக்கு பாதுகாப்பு வேண்டுமென கோரியும் இது தொடர்பாக நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர் .

இந்த சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
கொவல்தெனியவை தொடர்பு கொண்டு வினவியபோது குறித்த சம்பவம் தொடர்பில் விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :