நாளை சஜித் அம்பாறையில் ! தேர்தல் பிரச்சார கூட்டம் ஆரம்பம்!!



வி.ரி. சகாதேவராஜா-
க்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச நாளை (31) செவ்வாய்க்கிழமை அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு தேர்தல் பிரச்சார விஜயத்தை மேற்கொண்டு வருகை தருகின்றார்.

அதனையொட்டி "தீர்வற்ற நாட்டுக்கு தீர்வு"என்ற மகுடத்தின் கீழ் "மாற்றத்திற்கான முதல் சந்திப்பு திருக்கோவிலில் "என்று குறிப்பிடப்பட்ட பதாகைகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் வெள்ளையன் வினோகாந்தின் அழைப்பு ஏற்று அவர் நாளை காலை 9:00 மணிக்கு பொத்துவில் கோமாரி பிரதேசத்தில் தமிழ் வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மக்கள் சந்திப்பை நடத்துகின்றார்.
அதனைத் தொடர்ந்து திருக்கோவில் பிரதேசத்திற்கான பிரமாண்டமான தேர்தல் பிரச்சார கூட்டம் முதன் முதலாக தம்பிலுவில் ஏபிசி முன்னால் காலை 10 மணியளவில் அமைப்பாளர் வெள்ளையன் வினோகாந்த் தலைமையில் நடைபெற இருக்கின்றது.

பின்னர் 11 மணியளவில் அக்கரைப்பற்றில் முஸ்லிம் மக்களை சந்தித்து கலந்துரையாட இருக்கிறார். பிற்பகல் 2 மணி அளவில் அம்பாறை நகர சபை மண்டபத்தில் சிங்கள மக்களை சந்தித்து கலந்துரையாடுகின்றார்.

மாலை நான்கு மணியளவில் சம்மாந்துறையில் முஸ்லிம் மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றார்.

மாலை ஐந்து மணி அளவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தொகுதியில் தமிழ் மக்களை சந்தித்து அங்கு பிரச்சாரக் கூட்டம் ஒன்று இடம்பெற இருக்கின்றது.
உள்ளூராட்சி தேர்தலை ஒட்டி ஒரு தேசியத் தலைவர் இம்முறை முதல் முறையாக அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவை. அது ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசா அவருடைய பயணம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :