வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் 1998 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பழைய மாணவர் அமைப்பினர் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய் நிதியினை வழங்கியுள்ளனர்.
பாடசாலையின் மின்சார கட்டணம் மற்றும் பல்வேறு தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்ய பாடசாலை நிர்வாகத்தினர் பழைய மாணவர் அமைப்பிடம் முன்வைத்த கோரிக்கைக்கமைய அமைப்பின் உறுப்பினர்கள் புதன்கிழமை (18) நிதியினை வழங்கியுள்ளனர்.
நிதி வழங்கி வைக்கும் நிகழ்வில் பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன், பிரதி அதிபர் ஏ.ஆர்.முகைதீன் பாவா, பகுதித் தலைவர் கே.ஆர்.எம்.இர்ஷாத், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ்.ஐ.எம்.பஸீல், அபிவிருத்தி சங்க பொருளாளர் ஏ.எம்.அனஸ் ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிதியுதவி புரிந்த அந்நூர் 98 பழைய மாணவர் அமைப்பினர் ஏற்கனவே குறித்த பாடசாலைக்கு குடிநீர் வசதியினையும் பெற்றுத் கொடுத்துள்ளனர்.
இவ்வாறு பாடசாலையின் நலன்கருதி பங்களிப்பு செய்த அமைப்பினருக்கு பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment