சமூக செயற்பாட்டாளர் சம்சுதீனுக்கு சாமஸ்ரீ தேசகீர்த்தி விருது



றியாஸ் ஆதம் -
செக்டோ ஸ்ரீலங்கா அமைப்பின் ஆலோசகரும், சமூக செயற்பாட்டாளருமான அயாத்து முஹம்மது சம்சுதீன் சாமஸ்ரீ தேசகீர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இனங்களுக்கிடையில் அமைதியையும், நல்லிணக்கத்தினையும் கட்டியெழுப்புவதற்காக கலை, கலாச்சார, சமய மற்றும் சமூக சேவையில் அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்புக்காக மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பு இந்த விருதினை வழங்கியுள்ளது.

மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட துறைசார்ந்தவர்களை பாராட்டி விருது வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (29) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அரசியல் தலைவர்கள், கல்விமான்கள். புத்திஜீவிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
அட்டாளைச்சேனையை சேர்ந்த சம்சுதீன் இன, மத வேறுபாடுகளுக்கப்பால் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :