கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மேலதிகச் செயலாளராக கடமையாற்றிய வி.திவாகர சர்மா தனது அரச சேவையிலிருந்து இன்றைய தினம் (31) ஓய்வுபெறவுள்ளதையடுத்து அவரின் சேவைகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் தலைமையில் இடம்பெற்றது.
அமைச்சின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற இந்த கௌரவிப்பு நிகழ்வில் அமைச்சின் கணக்காளர் எஸ்.சட்குணேஸ்வரன், திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீவாணி, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (திருமதி) எஸ்.விஜயகுமார் மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டு அவரின் சேவைகளைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்களையும் வழங்கி கௌரவித்தனர்.
0 comments :
Post a Comment