காலநிலை மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் நஸீர் அஹமட் எகிப்து விஜயம்ஏறாவூர் சாதிக் அகமட்-
கிப்தில் நடைபெறவுள்ள "கோப்" 27 மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கைத் தூதுக் குழுவுக்கு தலைமை தாங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அமைச்சர் நசீர் அஹமட் அவர்களும் அங்கு செல்கிறார்.

இம்மாநாடு நாளை (06) முதல் (18) வரை ஷாம்அல் ஷேக் ஹோட்டலில் நடைபெறும். ஒன்பது தினங்கள், தங்கவுள்ள அமைச்சர் நஸீர் அஹமட், அங்கு, காலநிலைசார் நிபுணத்துவர்கள், தனியார் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.

இம்மாநாட்டில், பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை,ஏற்கனவே அமைச்சர் முடுக்கிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐ.நா வதிவிட பிரதிநிதி உள்ளிட்ட முக்கியஸ்தருடன் அமைச்சில்,பல தரப்பு கலந்துரையாட ல்களையும் அமைச்சர் நஸீர் அஹமட் நடாத்தியிருந்தார்.

இந்நிலையில், எகிப்து செல்லும் அமைச்சர் 07,08 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள தலைவர்கள் பங்கேற்கும் உச்சிமாநாட்டிலும் கலந்துகொள்கிறார். இத்தினங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஷேட உரை நிகழ்த்துகிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :