ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பினால் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரிக்கு குடிநீர் மற்றும் வுழு செய்வதற்கான நீர்தொகுதி அமைப்புக்கள் வழங்கி வைப்பு..!!!நூருல் ஹுதா உமர்-
ல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் மூலம் அம்பாறை மாவட்டத்தின் பல ஊர்களுக்கு பலதரப்பட்ட மனிதநேயப்பணிளைச் செய்துவருகின்றது. அந்த வகையில் மருதமுனை கமு/கமு/ ஷம்ஸ் மத்திய கல்லூரிக்கு குடிநீர் மற்றும் வுழு செய்வதற்கான நீர்தொகுதி அமைப்பை அமைத்துத் தருமாறு கல்லூரி அதிபர் எம்.எம். ஹிர்பஹான் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர்கள் கல்முனை மாநகரசபை உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம் ஊடாக ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருந்தனர்.

அக்கோரிக்கையினை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும், கல்முனை மாநகர பிரதிமுதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் ஏற்றுக்கொண்டு மிகவும் குறுகிய நாட்களுக்குள் குறித்த நீர்தொகுதி அமைப்புக்களை அமைத்து உத்தியோகபூர்வமாக திறந்து கல்லூரி நிர்வாகிகளிடம் கையளித்து வைத்தார். இப்படிப்பட்ட சேவைகளைச் செய்வதற்கு எமது பவுண்டேஷனுடன் ஒன்றித்து செயற்பட்டு வருகின்ற Y.W.M.A பேரவைக்கு தனது இதயபூர்வ நன்றிகளையும் இதன்போது ரஹ்மத் மன்சூர் தெரிவித்துக்கொண்டார்.

இந்நிகழ்வில் பவுண்டேஷன் ஸ்தாபகத் தலைவரும் கல்முனை மாநகர பிரதிமுதல்வருமான ரஹ்மத் மன்சூர், கல்லூரி அதிபர் எம்.எம். ஹிர்பஹான், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு தலைவர் ஏ.ஆர்.ஏ. றாசீக், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் நியாஸ் எம். அப்பாஸ், கல்முனை மாநகர சபை உதவி ஆணையாளர் எஸ்.எம். அஸீம், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ். உமர் அலி,எம்.எஸ்.எம். ஹரீஸ், அல்-ஹிக்மா ஜூனியர் பாடசாலை அதிபர் எம்.எல்.எம். மஹ்ரூப், ஏ.எம்.எம். றியாஜத், பவுண்டேஷனின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜே. எம். பாயிஸ், மற்றும் பவுண்டேஷனின் உறுப்பினர்களும், கல்லூரி நிர்வாகிகள், கல்லூரி மாணவர்கள், புத்திஜீவிகள், நலன்விரும்பிகள் என மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :